அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம் – மக்களவையில் உருவாகிய மசோதா!..

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை... ரூ.1 கோடி அபராதம்

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம் – மக்களவையில் உருவாகிய மசோதா!..

அரசுப் பணிகளுக்கான பொதுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் போன்றவற்றால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

Also Read: புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!..

மேலும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் ஆட்மாறாட்டத்தை நிறுத்தவும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முழு மசோதாவின் நோக்கம், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தேர்வில் முறைகேடுகளை உருவாக்கும் கும்பல் மீதும், தேர்விற்கு முன்பே வினாத்தாளை வெளியிட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாதிரியான முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்த மசோதா வழிவகை செய்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: குட் நியூஸ்!.. செம மாஸாக மாறப் போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

Leave a Comment