இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை: மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை: மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

இந்தியாவில் போலி கடன் செயலிகள்  மூலம் பல மோசடிகள் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் அதிக வட்டி வசூலிப்பது, கடன் வாங்கியவர்களின் மொபைல் போன் தகவல்களை திருடுவது, மிரட்டுவது போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் வழங்கி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற செயலிகள்  பெரும்பாலும் சீனாவை தலைமையகமாக செயல்பட்டுவருகிறது. இந்த வகை கடன் செயலிகள் மூலம் தற்கொலை சம்பவங்களும் நடைபெறுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read: வங்கி KYC புதுப்பிப்பு!..மக்களுக்கு புது வித சிக்கல்!..RBI கடும் எச்சரிக்கை!..

இந்திய ரிசர்வ் வங்கி(RBI) மற்றும் நிதிக் கட்டுப்பாட்டு இயக்குனரகங்களின் பரிந்துரைகளின்படி, நாட்டில் பயன்பாட்டில் உள்ள போலி கடன் செயலிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கே காரத் தெரிவித்துள்ளார்.

மத்திய மின்னணுவியல் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் 2021 முதல் ஜூலை 2022 வரை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 3,500 முதல் 4,000 கடன் செயலிகள் இடைநிறுத்தப்பட்டு 2,200 கடன் செயலிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இந்த ஆப்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment