தமிழகத்தில் அரிசி விலை தாறுமாறு.. அச்சத்தில் மக்கள்.. கிலோவிற்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர காரணம்? Rice Price Hike in Tamilnadu

5 to 10 rupees per kg rice price hike in tamilnadu due heavy rain elnino

Rise Price Hike: தமிழ்நாட்டில் அரிசியின் விலை கிலோவிற்கு 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பிரதான உணவான அரிசி விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏறக்குறைய 19 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு வருகின்றது. மழை, விளைச்சல் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 72 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. மழை சரியாக பெய்யாத காலகட்டங்களில் 14 லட்சம் ஹெக்டேர்களுக்கு மட்டுமே நெல் பயிரிடப்படும்.

இந்த ஆண்டு “எல் நினோ” ஆண்டாக மாறிவிட்டது. மழை பெய்ய நீண்ட நாட்களாவதும் பெய்யத் தொடங்கினால் மொத்தமாக கொட்டி தீர்ப்பதுமாக காலநிலை சதி செய்துவிட்டது. இதனால் தமிழ்நாட்டின் நெல் விளைச்சல் மட்டுமல்ல இதர எல்லா விளைச்சல்களும் பாழாகி போனது. தமிழகம் மட்டுமல்லாமல் தென் மாநிலங்கள் அனைத்திற்கும் இதே நிலைதான். அதே நேரத்தில் வடமாநிலங்களிலும் நீடித்த மழையும் வெள்ளப்பெருக்குமாக ஏற்பட்டு அங்கிருக்கும் விவசாயத்தையும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

Also Read: மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய 20 அறிவிப்புகள்!..

இதன் காரணமாக அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்வது அதிகரித்து விட்டது. ஏற்றுமதி அதிகரிப்பால் அனைத்து வகை அரிசிகளும் கிலோவிற்கு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை உயர்ந்து விட்டது. தமிழகத்தின் பெருநகரங்களில் 25 கிலோ அரிசி மூட்டை விலை நூறு ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நெல் விவசாயிகளுக்கு இந்த விலை உயர்வு மகிழ்ச்சியை தந்தாலும் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கிடையே அரிசி விலையானது மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும், இதனை சரிசெய்ய வேண்டும் எனில் அரிசிக்கான ஐந்து சதவீதம் GST குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Also Read: ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government’s Action Explanation!

3 thoughts on “தமிழகத்தில் அரிசி விலை தாறுமாறு.. அச்சத்தில் மக்கள்.. கிலோவிற்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர காரணம்? Rice Price Hike in Tamilnadu”

Leave a Comment