ஆதித்யா L1 விண்கலம்: ஜனவரி 7ல் நிலைநிறுத்தப்படும் என சற்றுமுன் இஸ்ரோ வெளியிட்ட தகவல்!..

இஸ்ரோ ஆதித்யா L1: சூரியனை ஆய்வு செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா விண்கலம். 

சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் கனவுத்திட்டமான ஆதித்யா L1 விண்கலம் செப்டம்பர் 2 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட நிலையில் 125 நாட்கள் பயணத்தில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்து தொடர்ச்சியாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம்.

கடந்த 90 நாட்களாக ஆதித்யா L1 விண்கலம் தொடர்ச்சியாக பயணத்தை மேற்கொண்ட நிலையில், குறிப்பாக செப்டம்பர் 25 ஆம் தேதி பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து விலகி ஆதித்யா L1 விண்கலம் இலக்கை நோக்கி சென்றுகொண்டுள்ளது.

இந்நிலையில் ஆதித்யா L1 விண்கலம் ஹாலோ ஆர்பிட் எனப்படும் லெக்ராஞ்சியன் நிலப்புள்ளியை சுற்றி ஜனவரி 7 ஆம் தேதி நிலைநிறுத்தப்படும்.

அதன் தொடர்ச்சியாக சூரியனை ஆய்வு செய்வதற்காக 6 கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் சூரியனை ஆய்வு பணிகளை தொடரும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தற்போது தெரிவித்துள்ளார்.

Leave a Comment