தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் திறக்கப்படாது… முக்கிய அறிவிப்பு!

தொடர்ச்சியாக விடுமுறை இல்லாமல் செயல்பட்டதற்கு ஈடாக வரும் நாட்களில் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு நியாய விலைக்கடைகள் விடுமுறை இல்லாமல் இயங்கின. இதன் எதிரொலியாக இன்று (நவ 25) நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ 12) தீபாவளி பண்டிகை என்பதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நவம்பர் 3 மற்றும் 10ம் தேதிகளில் வேலை நாட்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை அனைத்து நியாய விலைக்கடைகளும் விடுமுறையின்றி தொடர்ந்து இயங்கின.

தொடர்ச்சியாக விடுமுறை இல்லாமல் செயல்பட்டதற்கு ஈடாக வரும் நாட்களில் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இதற்குமுன் கடந்த நவ 13ம் தேதி நியாய விலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இன்றும் (நவம்பர் 25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று நியாய விலைக்கடைகள் இயங்காது.

Leave a Comment