மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய 20 அறிவிப்புகள்!..

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய 20 அறிவிப்புகள்!..

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்நிலையில் அவரது உரையில் இடம்பெற்ற 20 முக்கிய அறிவிப்புகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

Interim Budget 2024

 1. நேரடி வரி மறைமுக வரி என எந்த வரி விதிப்பு முறையிலும் மாற்றம் இல்லை.
 2. வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை.
 3. ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்.
 4. துறைமுகங்கள், தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் 3 பிரதான ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
 5. வெவ்வேறு பெயர்களில் செயல்படும் மகப்பேறு திட்டங்களே ஒரே திட்டமாக ஒருங்கிணைக்கப்படும்.
 6. 3 கோடி பெண்களே லட்சாதிபதிகளாக உருவாக்கப்படும்.
 7. நாற்பதாயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.
 8. கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க ஒன்பது முதல் பதினெட்டு வயது பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
 9. நாட்டின் உள்கட்டமைப்புக்கான 11.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 10. 1 கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
 11. அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.
 12. மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
 13. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 விழுக்காடு நிதி பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு.
 14. 50 ஆண்டு காலத்திற்கு மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் நிதியாக வழங்க 77 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
 15. மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
 16. விவசாயிகளுக்கு அதிக அளவில் உரம் விற்கப்படும் மற்றும் விவசாயிகள் வருமானத்தை உயர்த்தப்படும்.
 17. அறுவடைக்குப் பின் விளை பொருட்களை பாதுகாக்க மதிப்புக் கூட்டுப் பொருட்களை உருவாக்க சந்தைப்படுத்த திட்டம் வகுக்கப்படும்.
 18. விமான நிலையங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி நூற்று நாற்பத்தி ஒன்பதாக அதிகரிக்கப்படும்.
 19. உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 20. மக்கள் தொகை உயர்வால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க குழு அமைக்கப்படும்.

Also Read: ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government’s Action Explanation!