டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 TMC தண்ணீரை திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை குறைவு, காவிரி நதிநீர் பற்றாக்குறை ஆகியவற்றால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Also Read: மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய 20 அறிவிப்புகள்!..

இதனை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுக்களின் அறிக்கை அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 4715 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 18059 ஏக்கரிலும் நீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

எனவே விவசாயிகளின் நலனை கருதி மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 TMC தண்ணீரை திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த நீரை விவசாயிகள் சீக்கிரமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Also Read: தமிழகத்தில் அரிசி விலை தாறுமாறு.. அச்சத்தில் மக்கள்.. கிலோவிற்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர காரணம்? Rice Price Hike in Tamilnadu

2 thoughts on “டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!”

Leave a Comment