குட் நியூஸ்!.. செம மாஸாக மாறப் போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

Kilambakkam busstand

குட் நியூஸ்!.. செம மாஸாக மாறப் போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மேலும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் பயணத்தை எளிதாக்கவும் கிளாம்பாக்கில் 88 ஏக்கர் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைத்தார்.

இத்தகைய சூழ்நிலையில் கேளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படும்.

Also Read: புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!..

மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறு வியாபாரிகள் கடைகளை நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் ஆம்னி பஸ்கள் நிறுத்தங்களின் பணி ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சென்னை நகருக்குள் ஆம்னி பஸ்களை அனுமதிப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல, ஜிஎஸ்டி சாலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலம் கட்டுவதற்கு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.  சென்னை மெட்ரோ ரயில்நிறுவனத்தின் மூன்றாம் கட்டப் பகுதியாக கிளாம்பாக்கில் புதிய மெட்ரோ நிலையம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

Also Read: Interim Budget 2024: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

Leave a Comment