தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!..

தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!..

தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!..

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த மாதம் தை அமாவாசையை முன்னிட்டு வருகிற 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். மலையேற்றம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also Read: டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!

மேலும் தரிசனம் செய்ய பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும், பக்தர்கள் ஆற்றில் இரவு தங்குவதற்கோ, குளிப்பதற்கோ வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மலையேற்றம் அனுமதிக்கப்படும் நாட்களில் மழை பெய்தால், ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: தமிழகத்தில் அரிசி விலை தாறுமாறு.. அச்சத்தில் மக்கள்.. கிலோவிற்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர காரணம்? 

Leave a Comment