தொழிலாளர்களுக்கு வந்த குட்நியூஸ்… EPF வட்டி விகிதம் அதிகரிப்பு!

epfo interest rate hike upto 8.25 percentage

தொழிலாளர்களுக்கு வந்த குட்நியூஸ்… EPF வட்டி விகிதம் அதிகரிப்பு!

PF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், வட்டி விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு, டெல்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிதி சூழலுக்கு ஏற்ப திருத்தி அமைத்து வருகிறது.

இதில் கடந்த 1977-78-ல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. பின் இது 2013-14-ல் 8.75 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதம் மார்ச் 2022-ல் அறிவிக்கப்பட்டது.

Also Read: நீங்கள் PF கணக்கு வைத்திருப்பவரா? செய்யவில்லை என்றால் வரியா? வெளியானது முக்கிய தகவல்!..

அப்போதைய 8.5 சதவீத வட்டி விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத 8.10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், 2023-24ல் வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 6 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வட்டித் தொகை, மத்திய நிதித் துறையிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், பயனாளிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment