தேனி: ரூ.25 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்!..

தேனி: ரூ.25 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்!..

தேனி: ரூ.25 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்!..

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25.88 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவுக்கு கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனிஷ்கோடி தலைமை வகித்தார். மேலும் இவிழாவில் ஓடைப்பட்டி பேரூராட்சி உறுப்பினர்கள், செயல் அலுவலர் கணேசன், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Also Read: அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம் – மக்களவையில் உருவாகிய மசோதா!..

அப்போது சட்டப் பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேசுகையில், “ஓடைப்பட்டி பேரூராட்சியில் நபாா்டு திட்டத்தில் ரூ.85 லட்சத்தில் வெள்ளையம்மாள் பள்ளித் தெரு முதல் மேகமலை சாலை வரை தாா் ரோடு அமைத்தல், ஸ்வச் பாரத் திட்டத்தில் 120 தனிநபர் நபாட்களுக்கு ரூ.11.66 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டுதல் பணி நடந்து வருகிறது.

மேலும் 15வது நிதிக்குழு மானியம் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணியில் கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.38.50 லட்சத்தில் கழிப்பறை மேம்படுத்தும் பணிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது” என தெரிவித்தார்.

Also Read: இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை: மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

Leave a Comment