Gold Rate Today: மீண்டும் குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold price today

Gold Rate Today: மீண்டும் குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate Today: தங்கம் விலையானது பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

இதன்படி, பிப்ரவரி 6ஆம் தேதி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராமுக்கு ரூ.5,830 ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.4,776 ஆகவும், சவானுக்கு ரூ.128 குறைந்து ரூ.38,208 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.00 ஆகவும், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!..

Leave a Comment