Gold Rate Today: சர்ரென குறைந்த தங்கம் விலை..தீபாவளியன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி..

Gold and Silver Rate: சர்ரென குறைந்த தங்கம் விலை..தீபாவளியன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.

நவம்பர் முதல் தேதி முதல் தங்கம் விலை குறைந்த நிலையில்,  தீபாவளி பண்டிகை காரணமாக தங்கத்தின் விலையும் இன்றும் மீண்டும் குறைந்துள்ளது.

நேற்று சென்னையில் சவரனுக்கு ரூ.240 அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

இதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண நகையின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.44,800 ஆக விற்பனையாகிறது.

18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4,587 ஆகவும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,696 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராமுக்கு ரூ.76 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment