தேனி மாவட்டத்தில் திராட்சையின் விலை வீழ்ச்சி!..விவசாயிகள் கவலை..

தேனி மாவட்டத்தில் திராட்சையின் விலை வீழ்ச்சி!..விவசாயிகள் கவலை..

தேனி மாவட்டத்தில் திராட்சையின் விலை வீழ்ச்சி!..விவசாயிகள் கவலை..

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திராட்சை வரத்து அதிகரிப்பால் தேனி மாவட்டத்தில் அறுவடை செய்யும் திராட்சை கிலோ இருபது ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்னீரக கருப்பு திராட்சை சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

Also Read: தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!..

இங்கு அறுவடை செய்யும் திராட்சை மதுரை, திருச்சி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும். கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திராட்சை வரத்து அதிகரித்ததால் தேனி மாவட்டத்தில் அறுவடை செய்யும் கருப்பு பன்னீர் திராட்சையின் விலை கிலோ ஒன்றுக்கு இருபது ரூபாய் வரை குறைந்துள்ளது.

இதன் காரணமாக  வியாபாரிகளால் முதல் ரக திராட்சை கிலோ ஒன்றுக்கு முப்பது ரூபாய்க்கும் இரண்டாவது ரகம் இருபது ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் உற்பத்தி செய்த செலவு கூட கிடைக்கவில்லை என திராட்சை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Comment