Interim Budget 2024: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

Interim Budget 2024 தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

Interim Budget 2024: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறையில் தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ 2,41,261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா மற்றும் தெற்கு ஆந்திராவின் சிறிய பகுதியை தளமாக கொண்டுள்ள தெற்கு ரயில்வேக்கு ரூ 12,173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ 6,331கோடி ரூபாய் தமிழகத்தில் புதிய ரயில் திட்டங்களுக்கும், ரயில்வே கட்டுமான மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்திற்கு ரயில்வே துறை தொடர்பாக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2023-24 பட்ஜெட்டில் ரூ.6,080 கோடி ரூபாயும், 2022-23 பட்ஜெட்டில் ரூ.3,865 கோடி ரூபாயும், 2021-22 பட்ஜெட்டில் ரூ,3,855 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய 20 அறிவிப்புகள்!..

சென்னையில் சென்ட்ரல் எக்மோர் மற்றும் தாம்பரம் ரயில் முனையங்களை தொடர்ந்து நான்காவது முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பழனி இடையே 91 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை திட்டம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியாக 143 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொரப்பூர், தர்மபுரி இடையே 36 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை மற்றும் எக்மோர் ரயில் நிலையங்கள் இடையே உள்ள 4.3 கிலோமீட்டர் நீளம் உள்ள ரயில் பாதைகளை இரட்டிப்பு செய்யும் திட்டத்திற்கு ரூ.150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Also Read: வங்கி KYC புதுப்பிப்பு!..மக்களுக்கு புது வித சிக்கல்!..RBI கடும் எச்சரிக்கை!..

Leave a Comment