புதிய பயனாளிகளுக்கு ‘இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ இன்று முதல்வர் வழங்குகிறார்.

சென்னை: பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழவும், தமிழக அரசு, ‘கலைஞர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை’ கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் உள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில், மாதம்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 7 லட்சத்து 35 ஆயிரம் புதிய பயனாளிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த புதிய பயனாளிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட பெண் உரிமைத் தொகை வழங்கப்படும்.

இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், புதிய பயனாளிகளுக்கு ‘இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

Leave a Comment