மிக்ஜாம் புயல்: சான்றிதழ்கள் சேதம் அடைந்திருந்தால் மாற்றி தரப்படும்!..தமிழக தலைமைச் செயலாளர் அறிவிப்பு!..

தமிழக தலைமைச் செயலாளர்: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

தமிழக அரசு மேற்கொண்ட மீட்புப் பணிகளால் மக்கள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். மேலும், இந்த புயலால் மக்கள் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல பொருட்களும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர்
தமிழக தலைமைச் செயலாளர்

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் திரு.சிவதாஸ் மீனா முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது மழை மற்றும் வெள்ளத்தால் பள்ளி, கல்லுரி மாணவர்களின் சான்றிதழ்கள், மற்றும் ஏதேனும் சான்றிதழ்கள் சேதமடைந்தால், அவை கண்டிப்பாக சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் மாற்றித்தரப்படும் என அறிவித்துள்ளார்.

1 thought on “மிக்ஜாம் புயல்: சான்றிதழ்கள் சேதம் அடைந்திருந்தால் மாற்றி தரப்படும்!..தமிழக தலைமைச் செயலாளர் அறிவிப்பு!..”

Leave a Comment