இனி கேஸ் சிலிண்டர் வாங்க  இது கட்டாயம் – முழு விவரம் இதோ!

இனி கேஸ் சிலிண்டர் வாங்க இது கட்டாயம் – முழு விவரம் இதோ!
இனி கேஸ் சிலிண்டர் வாங்க இது கட்டாயம் – முழு விவரம் இதோ!

மத்திய அரசு நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. இது தவிர மற்ற எரிவாயு இணைப்புகளுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில், முறைகேடுகளைத் தடுக்க, ஆதார் எண் மற்றும் கைரேகையை வழக்கு இணைப்புடன் பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு செய்ய தமிழகம் முழுவதும் உள்ள கேஸ்  ஏஜென்சிகளில் மக்கள் வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

ஆனால், ஒருவருக்கு பல்வேறு எரிவாயு நிறுவனங்களில் பல இணைப்புகள் உள்ளதாகவும், இதனால் பலர் முறைகேடாக மானியம் பெறுவதாகவும், இதனை தடுக்கவே இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கேஸ் சிலிண்டர் இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஒருவருக்கு எத்தனை எரிவாயு இணைப்புகள் உள்ளன என்பதை அறிய உதவும். இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை வைத்திருப்பவர்களின் மானியம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்..! வெளியான முக்கிய அறிவிப்பு..! 

Leave a Comment