ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government’s Action Explanation!

Aadhaar Card Central Government’s Action Explanation!

ஆதார் என்பது ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்ட பன்னிரெண்டு இலக்க தனிப்பட்ட ID ஆகும். ஒரு குடியிருப்பாளரை அடையாளம் காண பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் முகவரி, முகத்தின் புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவிழி போன்ற தகவல்களை பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நாட்டின் இன்ன பிற அரசு நிறுவன முகமைகள் பிறந்த தேதிக்கான ஆதார சான்றாக ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள முன்வரும் நிலையில் தற்போதைய அறிவிப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government's Action Explanation!

உதாரணமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடைமுறையில் பிறந்த தேதிக்கு ஆதாரம் சான்றாக இளைஞர்கள் ஆதார் அட்டையை சமர்ப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்பொழுது இந்த நடைமுறை செல்ல தகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 180 நாட்கள் வசித்த அயல்நாட்டினர் ஒருவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருவதால் ஆதார் என்றுமே குடியுரிமை சான்றுக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் குடியுரிமை சான்றுக்கான ஆதாரமாக ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது பிறந்த தேதிக்கான சான்றாகவோ, பிறப்புக்கான சான்றாகவோ ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக பிறந்த தேதிக்கு ஆதார சான்றாக ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்தது.

ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government's Action Explanation!

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆதார் என்பது பிரதானமாக பயனாளிகளை அங்கீகரிப்பதற்கான ஒரு செயல்முறை என்றும், பிறந்த தேதிக்கான சான்றாக அது இல்லை என்றும் தெரிவித்தது. PAN கார்டு, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள், பல்கலைக்கழகங்களால் எடுக்கப்பட்ட மதிப்பெண் அட்டை, பள்ளி மாற்று சான்றிதழ், பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ், ஓய்வூதிய சான்றிதழ், அரசால் வழங்கப்பட்ட வசிப்பிட சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பிறந்த தேதியை நிறுவ முடியும் என்றும் தெரிவித்திருக்கிறது.

2 thoughts on “ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government’s Action Explanation!”

Leave a Comment