அரையாண்டு தேர்வு 2023-க்கான புதிய அட்டவணை வெளியீடு- பள்ளிக்கல்வித்துறை

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்தும், பள்ளி மாணவர்களின் நிலையும் கடும் சவாலாக உள்ளது.

அரையாண்டு தேர்வு 2023
அரையாண்டு தேர்வு 2023-க்கான புதிய அட்டவணை வெளியீடு- பள்ளிக்கல்வித்துறை

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக சில முக்கிய முடிவு எடுக்கப்பட்டு ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள், புயலின் பதிப்பில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் புத்தகங்கள் இல்லாமல் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை வரும் 13-ம் தேதி தொடங்க வேண்டும்” என கல்வித்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் புதிய கால அட்டவணையை வெளியிடுவதற்கான வழிமுறைகளையும் அவர் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களின் தேவைகளை கண்டறிந்து, 12ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரையாண்டு தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அரையாண்டுத் தேர்வு வரும் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்: சான்றிதழ்கள் சேதம் அடைந்திருந்தால் மாற்றி தரப்படும்!..தமிழக தலைமைச் செயலாளர் அறிவிப்பு!..

Leave a Comment