ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யலாம்!.. நாளை மக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு!

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யலாம்!.. நாளை மக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு!

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யலாம்!.. நாளை மக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு!

சென்னையில் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர் முகாம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இந்த மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்டப் பொதுமக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (10.02.2024) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

Also Read: இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை: மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

இந்த முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு/ரேஷன் கார்டு-ல் மாற்றம் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகள் அல்லது தனியார் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள், சேவைகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் இருப்பின், இம்முகாமில் பொதுமக்கள் தெரிவித்தால், புகார்கள் உடனடியாக தீர்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம் – மக்களவையில் உருவாகிய மசோதா!.. 

Leave a Comment