வங்கி KYC புதுப்பிப்பு!..மக்களுக்கு புது வித சிக்கல்!..RBI கடும் எச்சரிக்கை!..

வங்கி KYC புதுப்பிப்பு!..மக்களுக்கு புது வித சிக்கல்!..RBI கடும் எச்சரிக்கை!..

வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த நிறுவனங்களில் வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் KYC புதுப்பிப்பு என்ற பெயரில் அறிமுகம் இல்லாத இடங்களில் பொதுமக்கள் தகவல்களை அளிக்க வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி தற்போது எச்சரித்துள்ளது. KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில், RBI இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக RBI வெளியிட்ட அறிவிப்பில் KYC புதுப்பிப்பு என்ற பெயரில் எந்த ஆவணங்களையும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பொதுமக்கள் பகிரக்கூடாது. இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

Also Read: LPG கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள் – வெளியான முக்கிய தகவல்!

இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களிடம் தங்களுடைய டெபிட், கிரெடிட் கார்டு தகவல்கள், கடவுச்சொல், OTP உள்ளிட்டவற்றை எக்காரணம் கொண்டும் பகிரக்கூடாது. கைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி மட்டுமின்றி, மின்னஞ்சல், வாட்ஸஅப் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும், இதுபோன்ற மோசடி முயற்சிகள் நடைபெறுகின்றன.

அதில் KYC புதுப்பிக்காவிட்டால் உங்கள் வங்கி கணக்கு உடனடியாக முடக்கப்படும் என கூறி பதற்றத்தை உண்டாக்கி மோசடி செய்யும் விஷமிகளும் இருக்கின்றன. எனவே இது போன்ற விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். KYC புதுப்பிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு வங்கிகளை நேரடியாக அணுகுவது அல்லது வங்கி சேவைக்கான தொடர்புகளை பயன்படுத்துவதே முறையாகும் என்று RBI தெரிவித்துள்ளது.

Also Read: தமிழகத்தில் அரிசி விலை தாறுமாறு.. அச்சத்தில் மக்கள்.. கிலோவிற்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர காரணம்?

Leave a Comment