சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பின் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திர திருநாள் மகாராஜா கொடுத்த 450 பவுன் தங்க அங்கியை அய்யப்பன் அணிவது வழக்கம். அதன்படி நேற்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தும் வழக்கமான பூஜை நடைபெற்று வருகின்றன. பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.

பின்னர் வழக்கம்போல் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 3 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைக்கு பின், 41 நாட்கள் நடக்கும் மண்டல்கால பூஜை இரவு 11 மணிக்கு நிறைவடைகிறது.

Leave a Comment