தமிழக அரசு அறிவிப்பு: தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை!.

தீபாவளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 13ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடி வீடு திரும்பும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் நலன் கருதி 13.11.2023 அன்று நாள் மட்டும்.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படும். தமிழக அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 18.11.2023 அன்று வேலை நாளாக அறிவித்துள்ளது. முன்னதாக, ‘இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

கேதார – கெளரி விரதத்தை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment