புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!.. | New Ration Card

  1. புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!.. New Ration Card

புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!.. | New Ration Card

New Ration Card: புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணியை விரைவில் துவக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மகளிர் உரிமைத் திட்டம் அமல்படுத்தப்பட்டதால், 2023 ஜூன் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஏழு மாதங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஐந்தாயிரம் முதல், எட்டாயிரம் வரை, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

Also Read: Interim Budget 2024: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

புதிய கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் அச்சிடும் பணிகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல், ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.

லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான பின், புதிய ரேஷன் கார்டு அச்சிடப்படாது. விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு ரேஷன் கார்டு பெறமுடியாத நிலை ஏற்படும். எனவே புதிய ரேஷன் கார்டுகளை அச்சடிக்க அரசு உத்தரவிட்டு, அதற்கான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: வங்கி KYC புதுப்பிப்பு!..மக்களுக்கு புது வித சிக்கல்!..RBI கடும் எச்சரிக்கை!..

Leave a Comment