புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…தமிழகத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்..

தமிழக வானிலை அறிவிப்பு: வங்கக் கடலில் நாளை (14ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் அடிப்படையில் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (14ம் தேதி), 15ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றின் காரணமாக மீனவர்கள் 5 நாட்களுக்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment