வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்!.. இனி GPS மூலம் சுங்கவரி வசூல் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

toll collection through gps by central minister announced

வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்!.. இனி GPS மூலம் சுங்கவரி வசூல் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை அடுத்த மாதத்துக்குள் அமல்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு வசதியாக மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு GPS தொழில்நுட்பம் மூலம் பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்தார்.

Also Read: நீங்கள் PF கணக்கு வைத்திருப்பவரா? செய்யவில்லை என்றால் வரியா? வெளியானது முக்கிய தகவல்!..

இந்த விவகாரத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய செயல்முறையின் மூலம், ஃபாஸ்டாக் கார்டு இல்லாதவர்கள் இரண்டு முறை பணம் செலுத்த வேண்டியதில்லை. உங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.

Also Read: தொழிலாளர்களுக்கு வந்த குட்நியூஸ்… EPF வட்டி விகிதம் அதிகரிப்பு!

Leave a Comment